'பழைய ஃபார்முக்கு திரும்பிய வார்னர்...' 'இன்ஸ்டால போட்ட வைரல் வீடியோ...' இந்த தடவ யாரு சாங் தெரியுமா...? - தமிழ் ஃபேன்ஸ்-க்கு சர்ப்ரைஸ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | May 19, 2021 10:27 PM

இன்ஸ்டாவில் மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்துள்ளார் டேவிட் வார்னர்.

Video released with Warner\'s face for the Rowdy Baby song

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை வென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பிரபலமானர். அதோடு வார்னரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பாலிவுட், கோலிவுட் என இந்திய திரைப்படங்களின் சீன்களையும், பாடல்களையும் அவர் இன்ஸ்டா ரீல்களாக பதிவிடுவார்.

ஏப்ரல் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியத்தில் இருந்து அவரின் பதிவுகள் குறைய தொடங்கின. போட்டியில் கவனம் செலுத்திய வார்னர் அவரின் இன்ஸ்டா ரசிகர்களை ஏமாற்றினார் என்றே பலர் சொல்லிவந்தனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில், டேவிட் வார்னர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் சேட்டைகளை தொடங்கிவிட்டார்.

இந்த முறை எடுத்துள்ள வீடியோ நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின், 'ரவுடி பேபி' பாடல். யூடியூபில் பில்லியன் கணக்கில் வியூஸ் வாங்கிய இந்த பாடலில் தனுஷின் முகத்திற்கு பதிலாக வார்னரின் முகத்தை வைத்து வெளியாகியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதோடு வார்னரின் இந்த வீடியோ இன்ஸ்டா கம்பேக் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video released with Warner's face for the Rowdy Baby song | Sports News.