மூணே ‘மூணு’ பேர்தான்.. மொத்த டீமையும் ‘குளோஸ்’ பண்ணிட்டாங்க.. என்னய்யா ஆச்சு உங்களுக்கு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டி இன்று (27.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்மாக தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 66 ரன்களும், சாகா 87 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 44 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
பந்து வீச்சை பொருத்தவரை ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் டெல்லி அணியை வார்னர், சாகா மற்றும் ரஷித் கான் ஆகிய 3 பேர் கொண்ட கூட்டணியின் அதிரடியால் ஹைதாராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

மற்ற செய்திகள்
