இதுக்கு மேல முடியாது நட்டு...! 'ஏதாச்சும் பண்ணுங்க...' 'கடுப்பான வார்னர்...' - அடுத்த ஓவர் என்ன பண்ணார் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழர்களுக்கு பெருமை சேர்த்து தந்த நடராஜன் நேற்றைய போட்டியில் விளையாடிய நிகழ்வு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 2021ஆம் ஆண்டுக்கான ஐபில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது.
இந்த போட்டி கடைசி பால் வரை ரசிகர்களை நகம் கடிக்கும் அளவிற்கு விருவிருப்பாகியது. குறிப்பாக கொல்கத்தா அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி அடையாதற்கு காரணம் ஹைதராபாத் பவுலர்களின் பந்து வீச்சே என பலர் கூறிவருகின்றனர். ஒவ்வொரு ஓவரிலும் 11 ரன்னுக்கும் அதிகமாக கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
முக்கியமாக ரஷீத் கான் தவிர வேறு பவுலர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை எனவும், நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவருமே கொஞ்சம் சொதப்பினார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக புவனேஷ்குமார் எல்லா ஓவரில் பவுண்டரி சிக்ஸர்களை வாரி வழங்கினார். இதனால் நடராஜன் பக்கம் நம்பிக்கை வைத்த ஹைதராபாத் ரசிகர்களுக்கு அவரின் பங்காக அவரும் நேற்று தனது ஓவரையே சிக்சரோடுதான் தொடங்கினார். இவரின் முதல் பந்திலேயே கில் சிக்ஸர் அடித்துதான் இவரை வரவேற்றார். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் சென்றது.
அதன்பின் இரண்டாவது ஓவரில் ராணா, ராகுல் பவுண்டரிகளை விளாசினார்கள். இந்த ஓவரில் நடராஜன் பெரிய அளவில் ரன் செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. எப்போதும் ரன் செல்வதை கட்டுப்படுத்தும் நடராஜனே நேற்று ரன் கொடுத்ததை பார்த்து வார்னர் கோபம் அடைந்தார்.
அதன்பின் தனது மூன்றாவது ஓவரில் பார்மிற்கு வந்து, துல்லியமாக யார்க்கர் வீசி ரன் செல்வதை கட்டுப்படுத்தி 16வது ஓவரில் ஒரு விக்கெட் எடுத்தார். முக்கியமாக ஹைதராபாத் அணிக்கு டப் கொடுத்து அதிரடியாக ஆடிய ராகுலை அவுட் செய்தார்.
அந்த ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்தார். அதற்கு பின் அடுத்த ஓவரிலேயே வெறும் 9 ரன்கள் கொடுத்து ஸ்கோரை கொஞ்சம் கட்டுப்படுத்தினார்.
சென்னை சேப்பாக்கம் பிட்சில் முதல் இன்னிங்சில் பவுலிங் போடுவது கஷ்டமாக இருந்தது.கடைசி ஓவரில் மட்டும் புவேனஸ்வர் குமார் 16 ரன்கள் கொடுத்தார். இருந்தாலும், அப்படிப்பட்ட பிட்சிலும் நடராஜன் முதலில் மோசமாக வீசினாலும் பின் உடனே பார்மிற்கு திரும்பி யார்க்கர்கள் மூலம் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். அதன்பின்தான் கோபப்பட்ட வார்னரை கொஞ்சம் கூல்லானர்.