ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் ‘10 தடவை’.. அஸ்வின் சுழலில் சிக்கிய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் சுப்மன் ஹில் மற்றும் புஜாரா அரைசதம் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 103 ரன்களை எடுத்துள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் வில் புவோஷ்கி ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அதில் டேவிட் வார்னரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் எல்பிடபுள்யூ மூலம் அவுட் செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 முறை வார்னரை அவுட் செய்து அஸ்வின் அசத்தியுள்ளார். முன்னதாக இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், வார்னரை 12 முறை அவுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.