‘இந்த ஐபிஎல் அணி தான் CUP வெல்லும்!’.. ‘காரணம்.. இவர் இல்ல.. இவர் TALENT இல்ல.. எல்லாம் TOSS-தான்’!.. ’DREAM11-க்கு பின்னால ‘இப்படி ஒரு விஷயம் இருக்கா?’
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லப் போகும் கேப்டன் என டேவிட் வார்னரை ரசிகர்கள் கை காட்டுகிறார்கள். காரணம், இதற்கு முன்பாகப்ரோஹித் சர்மா, தோனி செய்த அதே சாதனையை இந்த சீசனில் டேவிட் வார்னர் செய்துள்ளார். ரோஹித் சர்மா, தோனி அப்போது ஐபிஎல் கோப்பை வென்றதை போல, டேவிட் வார்னர் இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வார் என்று கூறி வருகின்றனர். நடந்துவரும் பிளே-ஆஃப் சுற்றில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களும், ஆரோன் பின்ச் 32 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பின் 132 என்கிற இலக்கை விரட்டி ஆடத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்ஸ் 44 பந்துகளில் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 20 பந்துகளில் 24 ரன்களும், மணீஷ் பாண்டே 21 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து அணியை 4 விக்கெட் இழப்புக்கு 19.4 ஓவரில் 132 என்கிற இலக்கை நோக்கி அழைத்துச் சென்று வெற்றி பெறச்செய்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், ஹைதராபாத் தொடரை விட்டே விலக வேண்டிய நிலை ஏற்படும். இந்த நாக் அவுட் போட்டியில் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றதை அடுத்து, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த சீசனில் வார்னர் வென்ற 11வது டாஸ் இதுவாகும். இது ஐபிஎல் தொடரில் இது இன்னொரு அரிய சாதனை.
இதற்கு முன் இரண்டு ஐபிஎல் அணி கேப்டன்கள் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். டாஸ் வென்ற அந்த இரண்டு சீசன்களிலும் அந்த கேப்டன்களின் அணிகள்தான் கோப்பையை வென்றது.
ஆம், 2017 ஐபிஎல் தொடரில் 1 முறை டாஸ் வென்ற ரோஹித் சர்மா, அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட தனது மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை அழைத்து சென்று, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை கடைசி போட்டியில் வீழ்த்தி கோப்பை வென்றார்.
இதே போல, 2018 ஐபிஎல் தொடரில் தடைக்கு பின் திரும்பவும் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 11 முறை டாஸ் வென்றதும், அந்த சீசனின் கடைசி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தனது அணியை வெற்றி பெறச்செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இந்த சீசனில் டேவிட் வார்னர் 11 முறை டாஸ் வென்றுள்ளதால், செண்டிமெண்ட்டாக அவர் எப்படியும் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பார் என்றும், அந்த ட்ரீம் 11க்கும் இந்த 11 முறை டாஸ்க்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம், ஹைதராபாத் கோப்பை வெல்லும் என சொல்லப்படுவது இதுவே முதல் முறை அல்ல. ஹைதராபாத் அணி தான் கோப்பை வெல்லும் என பலரும் முதலில் இருந்தே கருத்துக்களை கூறி வருவதை காண முடிகிறது.

மற்ற செய்திகள்
