VIDEO: தம்பி, நீங்க பந்த 'தரையில' உருட்டி போட்டாலும் நான் 'சிக்ஸ்' அடிப்பேன்...! 'வார்னர் அடித்த மொரட்டு சிக்ஸ்...' 'மண்டையை பிய்த்துக் கொண்ட ரசிகர்கள்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (11-11-2021) நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் டேவிட் வார்னர் சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை டி-20 தொடரின் 2-வது அரையிறுதிப்போட்டியில் நேற்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் துபாய் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் அணியோ அடித்து ஆடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.
அடுத்ததாக, களமிறங்கிய ஆஸ்திரேலியா முதலில் தட்டு தடுமாறினாலும் கடைசி ஓவர்களில் வெளுத்து வாங்கியது. ஆஸ்திரேலியா மண்ணை கவ்வும் என எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் அணியை ஸ்டோய்னிஸ் – மேத்யூ வேட் கூட்டணி கதிகலங்க வைத்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஹபீஸ் பந்தில் வார்னர் அடித்த சிக்ஸரால் ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொண்டனர். அதாவது டீப் மிட் விக்கெட் திசை மீது வார்னர் அடித்த பிரமாண்ட சிக்ஸர் தான் காரணம்.
ஹபீஸ் ஒரு பகுதி நேர பந்து வீச்சாளர். நேற்று அவர் ஒரு மிக மோசமான பந்தை வீசினார். முதல் பந்து ஹபீஸ் வீசும்போது கையை விட்டு வழுக்கி சென்று, அந்த பந்து லெக் சைடில் இரண்டு பிட்சாகி வந்தது.
இது டெட் பால் என ரசிகர்கள் நினைத்த போது வார்னர் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பிரம்மாண்ட சிக்ஸர் பறக்க விட்டார்.
இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் விதிகளின் படி அது நோ-பால். கள நடுவரும் ஹபீஸ் வீசிய பந்தை நோபால் என்று அறிவித்தார். வார்னர் அந்தப் பந்தை சரியாக பயன்படுத்தி சிக்ஸ் அடித்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு அது போனஸாக அமைந்தது. இந்நிலையில், வார்னர் அடித்த அந்த சிக்ஸ்ர் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சில சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.
YOUTUBE THUMBNAIL MATERIAL.
🤝.#DavidWarner pic.twitter.com/dVC0jPcBNs
— Johnny#Aus🇦🇺🦘 (@JohnnySar77) November 11, 2021

மற்ற செய்திகள்
