'அவர' கிரவுண்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...! ஒரு மனுஷன இவ்வளவு 'மோசமாவா' அவமானப் படுத்துவாங்க...? - ஐபிஎல்-ல் 'நடந்த சம்பவம்' குறித்து கொந்தளித்த பிரெட் லீ ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமாக நடத்தியது என பிரெட் லீ அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் போது ஹைதராபாத் அணி முதலில் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர், பிறகு அணியிலிருந்து ஒரேடியாக நீக்கி அவரை அவமானப்படுத்தியுள்ளனர். ஒரு பெரிய வீரரை இப்படியா நடத்துவது என பிரெட் லீ கொந்தளித்துள்ளார்.
ஐபிஎல் 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அட்டவணையில் கடைசியில் முடிந்தது. வார்னர் 8 போட்டிகளில் 195 ரன்களை எடுத்தார். கடைசி 5 டி-20 போட்டிகளிலும் வார்னர் வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் முன்னாள் வீரர் பிரெட் லீ, வார்னர் நிச்சயம் பேட்டிங் ஃபார்முக்குத் திரும்புவார் என நம்பிக்கை அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் “அலை மீண்டும் திரும்பும், வார்னர் கிளாஸான ஒரு வீரர். அவர் தன்னுடைய தரமான விளையாட்டை ஒரே இரவில் காணாமல் அடித்துக் கொள்ளக் கூடியவர் கிடையாது. ஐபிஎல் தொடரில் அவரை மிக மோசமாகவே தொடர் முழுதும் நடத்தியுள்ளனர். முதலில் கேப்டன் பதவியை பறித்தனர். பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து நீக்கினர். கிரவுண்டுக்கு வருவதற்கே அவருக்கு அனுமதி வழங்கப்படாதது கொடுமை.
ஒரு விளையாட்டு வீரரின் தன்னம்பிக்கையை அழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமோ அது அத்தனையும் சன் ரைசர்ஸ் வார்னருக்குச் செய்துள்ளது. நிச்சயமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் டாப் வீரராகவே இருந்தார். நான் வார்னரிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன், நிச்சயம் அவர் அனைத்தில் இருந்து மீண்டு எழுவார்.” என்று கூறியுள்ளார் பிரெட் லீ.
டி-20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணியை போராடி வென்றுள்ளது. வரும் அக்டோபர் 28-ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்ள இருப்பது குறிப்படத்தக்கது.