"ஏம்பா, ஒரு SORRY கூட சொல்ல மாட்டியா??!!"... 'சைனி செய்த காரியத்தால் ஷாக் ஆகி'... 'வெச்சு செஞ்ச பேட்ஸ்மேன்கள்'... 'போட்டிக்கு நடுவே நடந்த பரபரப்பு சம்பவம்!!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 06, 2020 11:16 AM

டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் நவ்தீப் சைனி செய்த காரியம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO Navdeep Saini Angers Stoinis Pant By Not Apologising Pays Price

நேற்று டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், வழக்கம்போலவே டெல்லியின் பேட்ஸ்மேன்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை டெல்லி அணிதான் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 196 ரன்கள் எடுக்க, அதன்பின் இறங்கிய பெங்களூரு அணி 137 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

VIDEO Navdeep Saini Angers Stoinis Pant By Not Apologising Pays Price

இதற்கிடையே நேற்றைய போட்டியில் ஆர்சிபி பவுலர் நவ்தீப் சைனி செய்த காரியம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அணியின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ள சைனி ஆக்ரோஷமான வேகம், துல்லியமான யார்க்கர் என இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதுவரை நன்றாக பந்து வீசி வந்த சைனி திடீரென நேற்று நிறைய தவறுகள் செய்ததுடன் கொஞ்சம் அதிகமாக ரன்களும் கொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் என எல்லோருமே சைனி பந்துகளை பறக்கவிட்டனர்.

VIDEO Navdeep Saini Angers Stoinis Pant By Not Apologising Pays Price

இதனால் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிய சைனி, தான் போட்ட 14வது ஓவரின் 5வது பந்தில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸுக்கு 145 கிமீ வேகத்தில் பந்தை வீசினார். அது மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் நெஞ்சை குறி வைத்து வர, அதை அவர் கையால் தடுத்தார். இதன் காரணமாக அவருக்கு  கையில் காயம் ஏற்பட்டபோதும், அதை பார்த்துக் கொண்டு இருந்த சைனி ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. சைனி எதுவும் சொல்லாமல் சென்றதால் கோபமான மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்தார். இந்த பவுண்டரிக்கு பின் பண்ட் கோபமாக சைனியிடம் சென்று என்ன சாரி கேட்க மாட்டியா என சைகை செய்த பின்னே சைனி மார்க்ஸ் ஸ்டோய்னிஸிடம் சைகையில் வருத்தம் தெரிவித்தார்.

VIDEO Navdeep Saini Angers Stoinis Pant By Not Apologising Pays Price

ஆனாலும் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், பண்ட் இருவரும் இதனால் சமாதானம் அடையாத நிலையில், சைனி போட்ட அடுத்த ஓவரில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் அவரின் பந்துகளை பறக்க விட்டார். அதேபோல பண்டும் சைனி பந்துகளை எல்லா எல்லைக்கும் பறக்கவிட்டு சிக்ஸ் அடித்தார். இதை கொஞ்சம் கூட  எதிர்பார்க்காத சைனி கடைசி வரை டென்ஷனாகவே இருந்தார். 3 ஓவர் பந்துவீசி  48 ரன்கள் கொடுத்த சைனி ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில், நோ பால் வேறு போட்டு கோலியை கடுப்பாக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

VIDEO : https://www.iplt20.com/video/213061/the-saini-vs-stoinis-drama

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. VIDEO Navdeep Saini Angers Stoinis Pant By Not Apologising Pays Price | Sports News.