நேத்து ‘மூச்சுவிட’ கஷ்டப்பட்டதுக்கு காரணம் இதுதானா..? தோனி கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் இறுதியில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதற்கான காரணத்தை தோனி விளக்கியுள்ளார்.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போட்டியின் கடைசி 2 ஓவர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி மூச்சுவிட முடியாமல் சற்று சிரமப்பட்டார்.
இதுகுறித்து தெரிவித்த தோனி, ‘என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவால் இப்படி ஆகியிருக்கலாம். மைதானம் மந்தமாக இருக்கும்போது நேரம் எடுத்து ஆடுவதுதான் சிறந்தது. ஆனால் அவுட் ஃபீல்டை பார்க்கும்போது நம் உள்ளுணர்வு பந்தை வலுவாக அடிக்க வேண்டும் என கூறுகிறது.
நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. தொழில் நேர்த்தியுடன் ஆடுவது எப்படி என தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது கேட்ச்களை பிடிக்க வேண்டும். நோ பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த கூடியவைதான். செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறோம். பேட்மேன்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும்.
16-வது ஓவருக்கு பிறகு செய்த தவறையே செய்தோம். ஆட்டத்தின் திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும். யாரும் வேண்டுமென்றே கேட்சை விடமாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது கேட்ச்களை பிடித்தே தீர வேண்டும் என நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும். அணி சரியாக ஆடாதபோது கேட்ச்கள் தான் நமக்கு வழிகாட்டும்.
இங்கே மிகவும் வறண்டு காணப்படுகிறது. அதனால் தொண்டை வறண்டு விடுகிறது. மேலும் இருமல் வருகிறது. இதுபோல் இருக்கும்போது நாம் நேரம் எடுத்து ஆடுவதுதான் நல்லது. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்’ என தோனி கூறினார்.
Plz don't troll ra ms.dhoni not only a name its a emotion 💔🥺
World's best finisher...
Always #MSDhoni ❤🙏#IPL2020 pic.twitter.com/fHKLZ01zwn
— @Team pawanisam (@AshokNaiduPspk1) October 3, 2020

மற்ற செய்திகள்
