"பாத்தாரு, பறந்தாரு"... பவுண்டரி லைன் அருகே அடித்த 'டைவ்'... செம்ம கேட்ச்சால் அனைவரையும் 'ஸ்டன்' ஆக்கிய இளம்வீரர்!!!... 'வைரலாகும் வீடியோ!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் மனிஷ் பாண்டே பவுண்டரி லைன் அருகே டைவ் அடித்து பிடித்த கேட்ச் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த கேட்ச் மூலம் அவர் மும்பை அணிக்கு ரன் சேர்த்து வந்த இஷான் கிஷனை 31 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளார். மனிஷ் பாண்டே இந்த ஆட்டத்தில் பீல்டிங்கின் போது சில மிஸ் பீல்டிங் செய்தபோதும், அதற்கும் சேர்த்து இந்த கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
ICYMI - Catch marvel: SuperMan-ish 😱😱😱
He saw, he flew, he caught - Take a bow @im_manishpandey. That was a stunning catch. Right on the list of best so far in the tournament.
WATCH - https://t.co/byrZOMe9lX #Dream11IPL pic.twitter.com/c4B79TmXID
— IndianPremierLeague (@IPL) October 4, 2020

மற்ற செய்திகள்
