ஏன் கோலிக்கு மட்டும் இப்டி நடக்குது?.. அந்த ‘சாதனையை’ சந்தோஷமா கொண்டாட முடியாம போச்சே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 42 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 53 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
#ViratKohli became the first Indian batsman to reach 9000 runs in T20#IPL2020 #RCB pic.twitter.com/EM1yD3vUXr
— BARaju (@baraju_SuperHit) October 5, 2020
இப்போட்டியில் பெங்களூரு அணியின் சார்பாக கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 போட்டியில் 9000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். ஆனாலும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது கோலியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் கோலி தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானது தோல்விக்கு ஒரு காரணமென கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.