அவருக்கு ‘வயிற்று வலி’.. ‘இன்னைக்கு மேட்ச்ல அவர பார்க்க முடியாது’.. கேப்டன் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. பெங்களூரு அணியை பொருத்தவரை இரண்டு வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொய்ன் அலி மற்றும் முகமது சிராஜ் பெங்களூரு அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் வயிற்று பிரச்சனை காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா இப்போட்டியில் இடம்பெறவில்லை என பெங்களூரு அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
A look at the Playing XI for #RCBvDC #Dream11IPL pic.twitter.com/3cpRNm6Sna
— IndianPremierLeague (@IPL) October 5, 2020
அதேபோல் டெல்லி அணியில் அமித் மிஸ்ரா காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரு அணிகளும் 3 வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
