WATCH: லட்டு மாதிரி கெடச்ச ‘வாய்ப்பு’.. இப்டி கோட்ட வீட்டீங்களே பாஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்ட பெங்களூரு வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக லோம்ரோர் 47 ரன்களும், ராகுல் திவாதியா 24 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 158 ரன்களை அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் தேவ்தத் படிக்கல் 63 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் எளிமையாக கிடைத்த ரன்அவுட் வாய்ப்பை பெங்களூரு வீரர் தவறவிட்டார். பெங்களூரு அணி பந்து வீச்சாளர் உடானா வீசிய 19-வது ஓவரை ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் எதிர்கொண்டார். அப்போது மறுமுனையில் இருந்த ராகுல் திவாதியா ரன் எடுக்க ஓடி வந்தார். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் ஓடவில்லை. இதனால் ராகுல் திவாதியா மீண்டும் மறுமுனைக்கு ஓடினார். அப்போது உடானா வீசிய பந்து ஸ்டம்பில் படாமல் சென்றது. இதனால் எளிதாக பெறவேண்டிய ரன் அவுட் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
lord Tewatia deserved two runs for his effort here pic.twitter.com/OeyralANuL
— khushi (@donpenguin_) October 3, 2020

மற்ற செய்திகள்
