இனி 'நீங்க' ஆடலாம்... 'பச்சைக்கொடி' காட்டிய பிசிசிஐ... அடித்து நொறுக்க 'காத்திருக்கும்' முன்னணி வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 25, 2020 04:24 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், பினிஷர், கேப்டன் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர் கே.எல்.ராகுல். டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால் தற்போது இந்தியா திரும்பி பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார்.

KL Rahul included in Karnataka Squad for Ranji Trophy

நியூசிலாந்தில் இருந்து நாடு திரும்பிய மற்றொரு இந்திய வீரரான மணீஷ் பாண்டே வந்தவுடன் நேராக கர்நாடக ரஞ்சி அணிக்கு விளையாட கிளம்பி விட்டார். ஆனால் ராகுலை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதால் அவர் பெங்களூர் சென்று அங்கு பயிற்சி எடுத்து வந்தார்.

இந்த நிலையில் பெங்காலுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ராகுல் கர்நாடக அணி சார்பாக விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கு ஏற்றவாறு கர்நாடக அணியின் விளையாடும் வீரர்களின் பட்டியலிலும் ராகுல் பெயர் இடம்பெற்று உள்ளது. இதற்கு பிசிசிஐயும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.

கருண் நாயர் வழிநடத்தும் கர்நாடக அணியில் மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் என முன்னணி வீரர்கள் பலர் இடம்பெற்று இருக்கின்றனர். தற்போது கே.எல்.ராகுலும் அணியில் இணைந்திருப்பது அந்த அணியின் பலத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால் கண்டிப்பாக கர்நாடக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.