என்னது அவருக்கு ‘INJURY’-அ.. நம்புற மாதிரி இல்லையே..! பிசிசிஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானேவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25-ம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று (03.12.2021) மும்பையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, துணைக்கேப்டன் ரஹானே மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை ரஹானே கேப்டனாக இருந்து வழி நடத்தினார். இந்த சூழலில் திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களும் மட்டுமே ரஹானே எடுத்தார். அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்சில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். அதனால் ரஹானேவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இதன்காரணமாகவே ரஹானேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஓய்வு இருந்த விராட் கோலி இப்போட்டியில் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதனால்தான் ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Lie of the day:
Ajinkya Rahane is injured!
Why can’t they just say he has been DROPPED to make way for skipper Kohli?#IndvsNZ #testcricket
— Venkat Parthasarathy (@Venkrek) December 3, 2021
India players don't get dropped anymore; they just get injured.
— Alagappan Vijayakumar (@IndianMourinho) December 3, 2021
This morning Rahane found out he’s injured.
— Gabbbar (@GabbbarSingh) December 3, 2021

மற்ற செய்திகள்
