“இங்க அதெல்லாம் எடுபடாது”.. புது ப்ளானுடன் களமிறங்கும் நியூஸிலாந்து.. கோச் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து நியூஸிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நாளை (25.11.2021) கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள திட்டங்கள் குறித்து நியூஸிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். அதில், ‘இந்தியாவில் மற்ற அணிகள் எப்படி தோல்வியடைந்துள்ளன என்பதை பார்க்க வேண்டும். அப்போது தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை 4 வேகப்பந்து வீச்சாளர், 1 சுழற்பந்து வீச்சாளர் இருப்பதுதான் வழக்கம்.
ஆனால் இந்த யுக்தி இந்தியாவில் எடுபடாது. இங்கு 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும். அதனால் நியூஸிலாந்து அணியிலும் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் இது மைதானம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.