VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரேர் தான்’!.. பிசிசிஐ வெளியிட்ட ‘சூப்பர்’ வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Nov 25, 2021 10:03 AM

இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Rahul Dravid bowls off-spin in nets ahead of 1st Test

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

Rahul Dravid bowls off-spin in nets ahead of 1st Test

இதன் முதல் போட்டி இன்று (25.11.2021) கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் ஓய்வில் இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே டி20 தொடரில் தோல்வியடைந்ததால், டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் நியூஸிலாந்து அணி செயல்பட்டு வருகிறது.

Rahul Dravid bowls off-spin in nets ahead of 1st Test

இந்திய அணியும் டி20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில், டெஸ்ட் தொடரையும் வெல்ல தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளிட்டுள்ளது.

அதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலைப்பயிற்சியில் புஜராவுக்கு சுழற்பந்து வீசியது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ராகுல் டிராவிட்டை இதுபோல் பார்ப்பது எல்லாம் ரொம்ப அரிது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #INDVNZ #RAHULDRAVID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rahul Dravid bowls off-spin in nets ahead of 1st Test | Sports News.