VIDEO: ‘எப்பா என்னா பவுலிங்’!.. இந்த மாதிரி ‘மேஜிக்’ எல்லாம் ஜடேஜாவால தான் செய்ய முடியும்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் படேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து வீரர் சச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா அவுட்டாகி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் போட்டியின் 111-வது ஓவரை ஜடேஜா வீசினார்.
— Simran (@CowCorner9) November 27, 2021
அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா, பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரது காலுக்குக் கீழே குத்தி நேராக ஸ்டம்பில் அடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரச்சின் ரவீந்திரா, கோபமாக பெவிலியன் திரும்பினார். ஜடேஜாவின் இந்த சிறப்பான பந்துவீச்சை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

மற்ற செய்திகள்
