கடைசி வரை அந்த மனுசனை அவுட்டாக்க முடியல.. இந்தியாவின் வெற்றியை தடுத்த ‘தனி ஒருவன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணியும் தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி ஒரு விக்கெட்டை மட்டும் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டி டிராவில் முடிவடைந்ததற்கு நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் சச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) முக்கிய காரணமாக இருந்தார். 7-வது வீரராக களமிறங்கிய இவர் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து. எவ்வளவு முயன்றும் இவரது விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதேபோல் மறுமுனையில் அஜாஸ் படேலும் சிறப்பாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.