இந்த நேரத்துல நீங்க யார மிஸ் பண்றீங்க..?- “என் டீம் மேட்... ஆனா பெருசா வருத்தப்படலை”- என்ன சொல்ல வர்றீங்க ரஹானே..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியில் கேப்டன் ஆக விராட் கோலி இணைந்து கொள்கிறார். இந்தியா- நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்த டி20 கேப்டன் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஆக விளையாட உள்ள அஜிங்கியா ரஹானே தனது அணி குறித்து கான்பூர் க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். ரஹானே கூறுகையில், “கே.எல்.ராகுல் அணியில் இல்லாததது பெரிய விஷயம் தான். இந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலுமே கே.எல்.ராகுல் விளையாடப் போவது இல்லை. இங்கிலாந்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
நிச்சயமாக, நான் உட்பட அணியினர் அனைவரும் கே.எல்.ராகுலை மிஸ் செய்வோம். ஆனால், அவர் இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். அறிமுக வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். தொடக்க வீரர் ஆக யாரை களம் இறக்குவது என்பது குறித்து எல்லாம் கவலை இல்லை.
ராகுலைத் தவித இன்னும் 3 பேரை நாங்கள் மிஸ் செய்வோம். ரோகித், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரையும் நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால், இதில் வருத்தம் இல்லை. அனைத்து இளம் வீரர்களுக்கும் தங்கள் திறனை நிருபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். எங்கள் அணியைப் பொறுத்த வரையில் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து நிற்போம்.
தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து இப்போது யோசிக்க வேண்டாம். இங்கும் அங்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலில் இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து யோசிப்போம். இளம் வீரர்கள் யாராக இருந்தாலும் சுதந்திரமாக விளையாட வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு ஏற்ற சூழல் உள்ள போது அனைவரும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.