பிசிசிஐ வச்ச கோரிக்கை.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்த முக்கிய முடிவு.. அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் நடராஜன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து எதிரான தொடரில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த போட்டியில் வெற்றி பெற இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜனை விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடராஜனை எந்த போட்டியிலும் விளையாடாமல் புதிதாக இருக்க விரும்புவதாகவும், அதனால் விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடராஜன் விடுவிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நெட் பவுலராக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு சென்ற நடராஜன், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினார். தனது சிறப்பான பந்து வீச்சால் கவனம் பெற்றார். இந்த நிலையில் பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அடுத்து விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடராஜன் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
News Credits: Cricbuzz

மற்ற செய்திகள்
