‘ஓடினேன்.. ஓடினேன்.. பவுண்டரியின் எல்லை வரை ஓடினேன்’..CSK வீரர்களுக்கு தமிழ் எழுதும் டாஸ்க்..வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 15, 2019 11:11 AM
ஐபிஎல் சீசன் 12 உற்சாகமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், மிகவும் ஈஸியாக ஜெல் ஆகியிருக்கும் யெல்லோவ் வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பார்க்கப்படுகின்றனர்.
களத்தில் சீரியஸாகவும் சின்ஸியராகவும் விளையாடும் இந்த வீரர்கள் அதேசமயம், அவ்வப்போது கொண்டாட்டமாகவும் நகைச்சுவையாகவும் எதையாவது செய்வதுண்டு. பெரும்பாலான ரசிகர்களைக் கவரும் இவர்களது செயல்கள் எப்போதுமே வைரலாகக் கூடியவை.
கிரவுண்டில் சிறுவர்கள், ரசிகர்கள், சகவீரர்களுடன் ஓடி விளையாடும் கேப்டன் தோனி தொடங்கி, அவ்வப்போது ரியாக்ஷன்கள் காட்டும் ஹர்பஜன், சைலண்ட் ரியாக்ஷன்கள் கொடுக்கும் சின்ன தல ரெய்னா என அனைவருமே மிகுந்த கலகலப்பானவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுள் தாஹிரும் ஹர்பஜன் சிங்கும் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை கவருதுமுண்டு. அதிலும் ஹர்பஜனின் ட்வீட்கள் அனைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒவ்வொரு மேட்சையும் அப்போதைய சினிமா வசனத்துடன் இணைத்து பேசி ட்வீட் செய்வது இவரது பாணி.
இந்த நிலையில், சென்னை அணி வீரர்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளனர். இவர்களுள் சுரேஷ் ரெய்னா, தாஹிர் உள்ளிட்ட வீரர்கள் அனைவருக்கும் தமிழில் எழுதும் டாஸ்க் அளிக்கப்பட்டது. இதில் தாஹிர் ஓடினேன் ஓடினேன் என ரன் ஓடியதை குறிப்பிட்டு எழுதியுள்ளார். பலரும் ரெய்னாவின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக சின்ன தல என்று எழுதியுள்ளனர். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.