"'இந்தியா'ல மர்மத் தூண் வந்துருந்தா இப்டி தான் இருந்துருக்கும்..." என்னம்மா 'கற்பனை' பண்ணி யோசிக்குறாங்க நம்மாளுங்க..." வேற லெவலில் வைரலாகும் 'மீம்ஸ்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகத்தின் சில பகுதிகளில் மர்ம உலோகத் தூண் ஒன்று தோன்றி மறைந்தது கடும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
முதல் முறையாக அமெரிக்காவின் உட்டா என்னும் பாலைவனப் பகுதியில் தோன்றிய நிலையில், ஆட்கள் அதிகமாக நடமாடாத பகுதியில் எப்படி இவ்வளவு உயரமுள்ள தூண் தோன்றியது என அனைவரும் திகைத்து போயினர். அடுத்த சில நாட்களிலேயே அந்த இடத்திலிருந்து திடீரென மறைந்தது.
அதன் பிறகு ரோமானியா, கலிஃபோர்னியா, நெதர்லாந்து பகுதிகளில் தோன்றி மறைந்தது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு உலகளவில் மறக்க முடியாத ஆண்டாக கருதப்பட்டு வரும் நிலையில், இந்த மர்ம உலோகத் தூண் சம்பவமும் இந்தாண்டின் பட்டியலில் இணைந்துள்ளது.
இது ஏலியன் வேலையாக இருக்கலாம் என்று சிலர் கருதினர். மேலும் சிலர், சில மர்ம நபர்கள் வேண்டுமென்றே இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். இன்டர்நெட்டில் கடந்த சில நாட்களாக இந்த மர்ம தூண் தொடர்பான விவாதம் கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், இந்தியர்கள் இந்த மர்ம தூண் தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டு வருவது ஒரு படி மேலே போய் நெட்டிசன்கள் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த தூண் தோன்றியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பது போல கற்பனையில் பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Mysterious Monolith Appears in India😂😂 pic.twitter.com/ST32APeeMu
— SuperNova💥 (@iajinkya_18) December 8, 2020
— कृतिक 🔥 (@adbhutnar) December 5, 2020
— कृतिक 🔥 (@adbhutnar) December 5, 2020
True 😂😂😂😂😂😂
India mein aisa hi hota pic.twitter.com/WiXbCqB6cu
— कृतिक 🔥 (@adbhutnar) December 5, 2020
If #Monolith appears in India, scene on next day will be: pic.twitter.com/nSuM2AmZVo
— Bro. (@brosrike) December 6, 2020
if monolith appears in India pic.twitter.com/VBnDoLI7X7
— prayag sonar (@prayag_sonar) December 5, 2020
கிரிக்கெட் விளையாட ஸ்டம்பாக பயன்படுத்தி இருப்பார்கள் என்றும், மாடைக் கட்டி வைக்க பயன்படுத்தி இருப்பார்கள் என்றும் வேடிக்கையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். உலகமே மர்ம உலோகத் தூண் விஷயத்தை அதிர்ச்சியாக பார்த்து வரும் நிலையில், இந்தியர்களின் இந்த ஐடியாக்கள் அதிகம் லைக்குகளை பெற்று வருகிறது.