‘டிரெண்ட் போல்ட்டுக்கு தான் நன்றி சொல்லணும்’!.. போட்டி முடிந்ததும் குறும்பாக கிண்டலடித்த சூர்யகுமார்.. ஏன் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மன் 63 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் எடுத்தனர். இதில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சூர்யகுமார் யாதவ், ‘என்னால் எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்றார் போல் என்னை தயார்படுத்திக் கொள்வேன். 7-வது வரிசை வரை விளையாடி இருக்கிறேன். அதனால் எந்த வரிசையில் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக 3-வது வரிசையில்தான் விளையாடி வருகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘என்னுடைய கேட்சை தவறவிட்டதற்கு டிரெண்ட் போல்ட்டுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அன்று என் மனைவியின் பிறந்தாநாள்’ என சிரித்துக்கொண்டே சூர்யகுமார் யாதவ் கிண்டலாக கூறினார்.
"Thanks to Trent Boult for dropping my catch. It was my wife's birthday as well". - Suryakumar Yadav. pic.twitter.com/O1t9GAHREv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 17, 2021
போட்டியின் 16-வது ஓவரின் போது சூர்யகுமாரின் கேட்ச் ஒன்றை டிரெண்ட் போல்ட் தவறவிட்டார். ஆனாலும் டிரெண்ட் போல்ட் வீசிய 17-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் போல்டாகி வெளியேறினார். இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.