'அந்த பையன்' என்ன 'தப்பு' செய்தான்...? ஏன் 'டீம்'ல எடுக்கல...? 'யாராவது விளக்கம் சொல்லியே ஆகணும்...' - கடும் 'அதிருப்தியில்' சுனில் கவாஸ்கர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாட போகுது வீரர்களின் பெயர்பட்டியலில் இளம் வீரர் இடம்பெறாததற்கு முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை டி-20 நடந்து முடிந்தவுடன் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வரும் நவம்பர் முதல் 17ஆம் தேதி முதல் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் 3 டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் நேற்று பிசிசிஐ ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த போட்டியில் பெரிய எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட ராகுல் சாஹருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், 'நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ராகுல் சாஹர் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுத்து சேர்க்கப்பட்ட ராகுல் சாஹருக்கு இப்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மேட்சில் ஏன் இடம் இல்லை?
அவர் என்ன தவறு செய்துவிட்டார்? டி.20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு தான் கொடுக்கப்பட்டது. அதில் அவர் ஒரு ஓவருக்கு 7.5 ரன்கள் வீதம் கொடுத்துவிட்ட காரணத்தால் அவர் இந்திய அணியில் விளையாட தகுதியில்லாத வீரராக மாறிவிட்டாரா என்ன?
இந்திய அணியின் தேர்வாளர்களில் ஒருவராவது ராகுல் சாஹரிடம் முறையான விளக்கம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
