வேட்டி சட்டையில் "தமிழ் மகன்" ரவீந்திர ஜடேஜா.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வைரல் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் புதிய தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Also Read | வரலாற்று வெற்றியை பதிவு செய்த மொரோக்கோ.. மகனுடன் மைதானத்தில் நடனமாடிய தாய்.. உலக வைரல் வீடியோ..!
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தனக்கு ஏற்பட்ட கால் காயத்தில் இருந்து முழுவதும் குணமாகி விட்டார்.
முன்னதாக, இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தொடருக்கு நடுவே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, 2022 ஆம் ஆண்டுக்கான குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2022 குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) கட்சி சார்பில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் சட்டசபையின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
சமீபத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஜடேஜா சந்தித்தும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் புதிய புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வேட்டி சட்டையில் ரவீந்திர ஜடேஜா காட்சியளிக்கிறார். இந்த போட்டோவுக்கு "அழகிய தமிழ் மகன்" என தலைப்பிட்டுள்ளனர்.
அழகிய தமிழ் மகன் 💛 @imjadeja pic.twitter.com/6CuUDKwzKT
— Chennai Super Kings (@ChennaiIPL) December 13, 2022

மற்ற செய்திகள்
