VIDEO: ‘ஆர்சிபி.. ஆர்சிபி’ கத்திய ரசிகர்கள்.. உடனே சைகையில் ‘சிராஜ்’ சொன்ன விஷயம்.. அடுத்த நொடியே மாறிய கோஷம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி என கத்திய ரசிகர்களிடம் முகமது சிராஜ் சைகை மூலம் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கான்பூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நியூசிலாந்தை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலுக்கு ‘ஆட்டநாயகன்’ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ‘தொடர்நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விருதுகள் வழங்கப்பட்டு கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை அழைத்தனர். உடனே அவர் திரும்பி பார்த்து கை அசைத்ததும், அனைவரும் ஆர்சிபி.. ஆர்சிபி.. என கோஷமிட்டனர்.
#INDvsNZ #CricketTwitter #siraj
Siraj bhai telling crowd to cheer for India and not Rcb😎 pic.twitter.com/Yj0V415dsF
— Pushkar (@musafir_hu_yar) December 7, 2021
உடனே சுதாரித்த முகமது சிராஜ் தனது ஜெர்சியில் உள்ள பிசிசிஐயின் சிம்பிளைக் காமித்து ‘இந்தியா’ என கூறினார். உடனே ரசிகர்கள் இந்தியா.. இந்தியா.. என கோஷமிட்டனர். முகமது சிராஜின் இந்த பண்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக முகமது சிராஜ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
