‘அவரை ஏலத்துல எடுக்க ரொம்ப கடமை பட்டிருக்கோம்’.. ‘சின்ன தல’-ய விட முக்கியமான வீரர்..? சிஎஸ்கே சிஇஓ ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் திட்டம் குறித்து சிஇஓ காசிவிஸ்வநாதன் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா. தோனி. மொயின் அலி. ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்தது. இதில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய டு பிளசிஸ் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொயின் அலி தக்க வைக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.
அதற்கு காரணம் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வெற்றிபெற டு பிளசிஸ் காரணமாக இருந்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 633 ரன்களை விளாசினார். குறிப்பாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 86 ரன்கள் அடித்து சிஎஸ்கே வெற்றி பெற முக்கிய காரணமாக டு பிளசிஸ் இருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் இதுகுறித்து பதில் அளித்துள்ளார். அதில், ‘டு பிளசிஸ், சிஎஸ்கே அணியை இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை ஏலத்தில் முதன்மை வீரராக எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதற்காக நிச்சயம் முயற்சி செய்வோம். ஆனால் அது நிறைவேறுமா என்பது நம் கையில் இல்லை. அவர் எங்கிருந்தாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் நினைப்போம்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் ‘சின்ன தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் முதல் வீரராக தக்க வைக்கப்படுவார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அப்படி உள்ள சூழலில் டு பிளசிஸை முதல் வீரராக தக்க வைக்க வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே சிஇஓ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
