"ரொம்ப ஆசைப்பட்டேன், கடைசியில".. ஓய்வுக்கு முன்பு விருப்பப்பட்ட ஸ்ரீசாந்த்.. "ஆனா, அதுவும் நடக்காம போயிடுச்சு"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த கேரள வீரர் ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி விடுவித்தது.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை
இதனையடுத்து, பிசிசிஐ அவருக்கு விதித்த தண்டனையை குறைக்கவே, ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் கேரள அணிக்காக விளையாடி வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை ஸ்ரீசாந்த் பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால், எந்த அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
ஓய்வு முடிவு
இந்திய அணிக்காகவும் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஈடுபவடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அது கைகூடாமல் போனது. தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில், கேரளா அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடிய அவர், ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.
கனத்த இதயத்துடன்..
கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன் என்றும், அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் உருக்கம்
ஸ்ரீசாந்த் முடிவால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், உருக்கமான கருத்துக்களை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்திய அணி, கடந்த 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே, டி 20 மற்றும் ஐம்பது ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்த இரு தொடர்களிலும், ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கடைசி போட்டி
இந்நிலையில், ஓய்வுக்கு பிறகு முக்கிய விஷயம் ஒன்றை பற்றி ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ரஞ்சி தொடரின் மேகாலயாவுக்கு எதிரான முதல் போட்டியில், ஸ்ரீசாந்த் அணியில் இடம்பிடித்திருந்தார். தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளில், ஸ்ரீசாந்துக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
Farewell போட்டி
இது பற்றி பேசிய ஸ்ரீசாந்த், "ரஞ்சி தொடரில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வேண்டி ஆவலுடன் இருந்தேன். போட்டிக்கு முன்பாக நடந்த மீட்டிங்கின் போதும், கேரளாவுக்கு இது என்னுடைய கடைசி போட்டியாக என்பதை எடுத்துரைத்தேன். நான் Farewell போட்டி ஆட தகுதி ஆனவன் என நம்பினேன்" என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் போட்டிக்கு முன்பாக அணியினரிடம் தெரிவித்த போதும், அவருக்கு கேரளா கிரிக்கெட் நிர்வாகம், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், Farewell போட்டி ஆடாமலேயே, ஸ்ரீசாந்த் தனது ஓய்வினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
