அன்றே கணித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்??.. கிரிக்கெட் வீரருக்கு பதில் சொன்ன ஆம் ஆத்மி.. "எப்படி எல்லாம் முடிச்சு போடுறாங்க.."
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று வெளியாகியிருந்தது.
இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, முதல் முறையாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யவுள்ள இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் உருவாகியுள்ளது. நாட்டிலுள்ள பல தலைவர்களும், ஆம் ஆத்மி கட்சியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் ட்வீட்டை, ஆம் ஆத்மி கட்சி, டேக் செய்து ட்வீட் செய்துள்ளது, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட பல பழைய ட்வீட்களை, நிகழ்காலத்தில் நடைபெறும் விஷ்யத்துடன் முடிச்சு போட்டு வருவார்கள்.
ஆம் ஆத்மி கட்சி
உதாரணத்திற்கு, இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த நாள், ஐபிஎல் தொடரில் சில போட்டியின் முடிவுகள், இங்கிலாந்து அணி உலக கோப்பையைக் கைப்பற்றிய சமயத்திலும் என இவை குறித்து முன்பே கணித்து, ஆர்ச்சர் ட்வீட் செய்ததாக ஒப்பிட்டு வந்தனர். அந்த வகையில், தற்போது ஒரு செயலை, ஆம் ஆத்மி கட்சி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், 20 ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், 'sweep?' என்ற வார்த்தையை ஆர்ச்சர் ட்வீட் செய்திருந்தார்.
கேள்விக்கு பதில்
அதே தினத்தில் தான், பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது. தொடர்ந்து, நேற்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, ஆர்ச்சரின் ட்வீட்டினை டேக் செய்த அக்கட்சி, ஆர்ச்சரின் கேள்விக்கு 'ஆம்' என பதிலளித்துள்ளது.
இணையத்தில் வைரல்
ஸ்வீப் என்றால், துடைத்தல் என்று அர்த்தம். ஆம் ஆத்மி கட்சியின் சின்னமாக, துடைப்பம் உள்ளது. இதனால், சுத்தமாக துடைத்து விட்டோம் என்ற அர்த்தத்தில், ஆர்ச்சரின் ட்வீட்டிற்கு அந்த கட்சி பதிலளித்து ட்வீட் செய்துள்ளது. கிரிக்கெட் வீரரின் ட்வீட்டிற்கு, அரசியல் கட்சி கொடுத்த பதில் தொடர்பான ட்வீட்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.