’இந்தமுறை செமயா விளையாண்டிருக்கேன்.. ஆனா என் மகளோ’.. ரோஹித்தின் வைரல் கமெண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 06, 2019 06:00 PM

தற்போது நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில், கொல்கத்தா 133 ரன்கள் எடுத்ததும், முதலில் பின்னடைவைச் சந்தித்த மும்பை அணி, ரோகித்தின் அரைசதத்தின் உதவியோடு, விறுவிறுவென முன்னேறி கொல்கத்தாவை வீழ்த்தி மேட்சை வென்றதோடு, சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடமும் பிடித்தது.

This time I Played Well,But my daughter slept,Rohits Hilarious comment

இந்த போட்டியைக் காண ரோஹித்தின் மனைவியும் மகள் சமைராவும் மைதானத்துக்கு வந்தமர்ந்திருந்தனர். போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித், அதை தன் மகளுக்கு டெடிகேட் செய்வதாக முன்னதாக செய்கை காட்டியிருந்தார். பின்னர் போட்டி முடிந்ததும், மகளிடம் கிரவுண்டில் கொஞ்சிப்பேசிய புகைப்படங்கள் வைரலாகின.

பின்னர் பேசிய ரோஹித், தனது ஆட்டத்தைக் காண அடிக்கடி தனது மகள் அங்கு வருவார், ஆனால் அப்போதெல்லாம் தான் சிறப்பாக விளையாண்டதில்லை என்றும், இம்முறை தான் சிறப்பாக விளையாண்டது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதே சமயம் தன் மகளோ நன்றாக தூங்கிக்கொண்டிருந்தால் என்றும் கூறி புன்னகைத்தார்.

அதுமட்டுமல்லாமல், அடுத்து சென்னை அணியுடனான குவாலிஃபையர் போட்டி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய ரோஹித், ‘அபூர்வம் நிறைந்த ஐபிஎல் போட்டித் தொடரைப் பொருத்தவரை, இங்கு எந்த அணியும் எத்தகைய அணியையும் வீழ்த்தக் கூடிய திறன் வாய்ந்ததாக இருக்கலாம். ஆகையால் இங்கு வெற்றி தோல்வி இழப்பை தவிர முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம்’ என்று கூறியுள்ளார்.