‘அந்த டெலிவரி பாயா, அப்ப சாப்பாடே வேணாம்’... ‘ஆர்டரை கேன்சல் செய்த வாடிக்கையாளர்’... 'பதிலடி கொடுத்த சொமட்டோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 31, 2019 02:31 PM

இந்து மதத்தைச் சாராதவரிடம் உணவைக் கொடுத்து அனுப்பியதால், அந்த ஆர்டரை ரத்து செய்தேன் என்று பதிவிட்ட வாடிக்கையாளருக்கு சொமட்டோ ஆன்லைன் நிறுவனம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Man Cancels Order Over Non-Hindu Rider, see Zomato\'s Response

இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, சொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமையன்று, ‘நான் ஆர்டர் செய்திருந்த உணவை, இந்து அல்லாத ஒருவரிடம் சொமேட்டோ நிறுவனம் கொடுத்தனுப்பியது. அவர்கள், உணவு டெலிவர் செய்யும் நபரை மாற்ற மாட்டேன். பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்று கூறினார்கள். நீங்கள் என்னை கட்டாயப்படுத்தி உணவை வாங்கச் சொல்ல முடியாது. எனக்கு, உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்’ என்று உணவினை கேன்சல் செய்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு இன்று காலை சொமட்டோ நிறுவனம் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘உணவுக்கு மதம் கிடையாது. உணவு என்பதே மதம்தான்’என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அதன் நிறுவனர், அதனை ஹேஷ்டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சொமட்டோவின் பதிலுக்கு ஆதரவாக நெட்டீசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், இந்து அல்லாதவரிடமிருந்து உணவு வாங்க மாட்டேன் என்ற பதிவிட்டவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #ZOMATO #FOOD #DELIVERY