என்னதாங்க ஆச்சு இந்தியாவுக்கு..? ஏன் அந்த பையனை முன்னாடியே இறக்குனாங்க..? ஒன்னுமே புரியலயே.. கேள்விகளை அடுக்கிய அக்தர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் அந்த இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியையே இந்தியா சந்திந்துள்ளது.
அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. தொடரின் முதல் போட்டியே இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
உலகில் முன்னணி அணியாக திகழ்ந்து வரும் இந்தியா, டி20 உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில் சொதப்பி வருவது முன்னாள் வீரர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ளவே சிரமமாக இருந்தது. ஏன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி தங்களது பேட்டிங் ஆர்டரை மாற்றினார்கள் என தெரியவில்லை. அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர் இஷான் கிஷனை ஏன் அவர்களுக்கு முன் களமிறக்கினர்? அப்படி என்ன திட்டத்துடன் தான் இந்தியா விளையாடியது என்று புரியவே இல்லை.
The Indian team looked clueless tonight I really don’t know why😳.. pic.twitter.com/c2nbGQIWkN
— Shoaib Akhtar (@shoaib100mph) October 31, 2021
எல்லா வீரர்களும் பதற்றத்துடனே இருந்தனர். பந்தை சரியாக கணிக்க முடியவில்லை என்றால், 20 வரை பொறுமையாக விளையாடுங்கள். பவுலிங்கில் பும்ரா மட்டும்தான் விக்கெட் எடுத்துள்ளார். மற்ற பவுலர்கள் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. மொத்தத்தில் இந்தியா எனக்கு சாதாரண அணியாக தோன்றியுள்ளது’ என சோயிப் அக்தர் கூறினார்.
அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி, இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இன்னும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல சில வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த தொடரில் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்துப் பார்த்தால், அவர்கள் தகுதி பெறுவதென்பது அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான்’ என சாகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
