VIDEO: அடப்பாவமே..! இப்படி அவுட் ஆகுறதெல்லாம் ரொம்ப ‘RARE’ தான்.. விரக்தியில் வெளியேறிய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் ஒரு பந்தை கூட சந்திக்காமல் அவுட்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஷார்ஜா மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 23-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், வங்கதேச அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹ்முதுல்லாஹ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 39 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. ஆனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே வங்கதேச அணி எடுத்தது. அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் (Andre Russell) வித்தியாசமாக அவுட்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின் 13-வது ஓவரை வங்கதேச வீரர் டஸ்கின் (Taskin) வீசினார். அப்போது ராஸ்டன் சேஸ் பேட்டிங் செய்ய, மறுமுனையில் ரசல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட ராஸ்டன் சேஸ், ஸ்ட்ரைட் ட்ரைவ் திசையில் அடித்தார். உடனே பந்தை தடுக்க பவுலர் டஸ்கின் காலை நீட்டினார். ஆனால் பந்து அவரது காலை லேசாக உரசிக்கொண்டு நேராக ஸ்டம்பில் அடித்தது. அந்த சமயம் ரசல் க்ரீஸை விட்டு வெளியே நின்றதால், அம்பயர் ரன் அவுட் கொடுத்துவிட்டார். களமிறங்கி ஒரு பந்தை கூட சந்திக்காமல் விரக்தியில் ரசல் பெவிலியன் திரும்பினார்.

மற்ற செய்திகள்
