Jai been others

பல வருஷமா 'அதோட மதிப்பு' தெரியாம வீட்டுக்குள்ளேயே இருந்த பொருள்... 'உண்மை தெரிய வந்தப்போ...' - ஒரே நாளில் கோடீஸ்வரி ஆன பெண்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Nov 01, 2021 11:31 PM

வடகிழக்கு இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த பழைய பொருட்களை விற்க போன இடத்தில் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

Woman bids Rs 20 crore worth of diamonds in england

வடகிழக்கு இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டில் இருந்த பழைய உடை, அணிகலன்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதனை ஏலம் விடும் இடத்திற்கு எடுத்தும் சென்றுள்ளார்.

ஏலம் கடைக்காரரிடம் தான் வைத்திருந்த பெட்டியை அந்த  பெண்மணி கொடுத்து ஏலம் விடுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் கொடுத்த கற்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த கடைக்காரர் பல மாதங்களாக அந்த கற்களை அவரே வைத்துள்ளார்.

தற்போது அந்த கற்களை ஆய்வு செய்யும் போது தான் அது 34.19 காரட் எடை கொண்ட வைரகற்கள் என தெரியவந்துள்ளது. அதோடு இந்த கற்களை ஆய்வு செய்த பின் அது பல ஆண்டுகளுக்கு முன் பெல்ஜியம் நாட்டில் ஆன்ட்வெர்ப்பில் எச்ஆர்டி டைமன்ட் விற்பனை பரிசோதனை கூடத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அறிந்த அந்த ஏலம் விடும் நபர் வைர  கற்களை கொடுத்த பெண்ணிடம் தகவல் தெரிவித்துள்ளார். தான் வைத்திருந்த கற்களை பற்றி அறிந்த அந்த பெண் ஒரு நிமிடத்தில் 20 கோடி மதிப்பிலான ரூபாய்க்கு அதிபதி ஆகியுள்ளார்.

இதுகுறித்து கூறிய அந்த பெண்மணி, 'நான் முதலில் இந்த கற்களை குப்பையில் போட தான் சென்றேன். ஆனால் என் அண்டை வீட்டார் கூறியதால் இந்த ஆபரணங்களை ஏலம் விடும் இடத்திற்கு கொண்டுவந்தேன்' எனக் கூறியுள்ளார்.

Tags : #DIAMONDS #ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman bids Rs 20 crore worth of diamonds in england | World News.