VIDEO: முதல்ல ரோஹித், அப்புறம் ராகுல், அதுக்கப்புறம் கோலி.. ரசிகர்கள் ஒவ்வொரு பேரா சொல்ல சொல்ல ‘பாகிஸ்தான்’ ப்ளேயர் செஞ்ச செயல்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி இந்திய வீரர்களை கிண்டல் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி இன்று (11.11.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய அணியின் வீரர்களை கிண்டல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
அதில் ஸ்காட்லாந்தை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி பவுண்டரி லைனுக்கு அருகில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரது பெயர்களை கூறி கத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர்கள் எவ்வாறு அவுட்டாகினர் என சாஹின் அப்ரிடி செய்து காட்டினார்.
— Scorpion_Virat (@crickohli18_) November 8, 2021
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது. அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரது விக்கெட்டை பாகிஸ்தானின் சாஹின் அப்ரிடி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.