‘மகேந்திரா’ இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? தோனிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 07, 2021 07:26 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சேவாக் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Sehwag wishes happy birthday to MS Dhoni in the most unique way

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று (07.07.2021) தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sehwag wishes happy birthday to MS Dhoni in the most unique way

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக், தோனிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘மகேந்திரா என்றால் வானத்தின் கடவுள் என்று அர்த்தம். ஆட்டத்தில் காட்டிய அதிரடியால் பலரின் அன்பைப் பெற்று பூமியில் உள்ளவர்களை அவர் மகிழ்விக்கிறார். தோனி ஒரு தலைமுறைக்கான வீரர்’ என சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பழைய ட்வீட்டையும் சேர்த்து டேக் செய்துள்ளார்.

Sehwag wishes happy birthday to MS Dhoni in the most unique way

முன்பு தோனிக்கும், சேவாக்கிற்கும் சண்டை என பலரும் கூறி வந்தனர். தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும், சேவாக் போன்ற மூத்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மூத்த வீரர்கள் அனைவரையும் தோனி விளையாட வைத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த ஆண்டுதான் இந்திய அணி உலகக்கோப்பை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Sehwag wishes happy birthday to MS Dhoni in the most unique way

இந்த நிலையில், தோனிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சேவாக் பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sehwag wishes happy birthday to MS Dhoni in the most unique way | Sports News.