என் கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமா அமஞ்சதுக்கு அந்த ‘தமிழக’ வீரர் உட்பட 3 பேர்தான் காரணம்.. பழசை மறக்காத சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைந்ததற்கு மூன்று பேர்தான் காரணம் என சேவாக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், கடந்த 1999-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8273 ரன்களும், 19 டி20 போட்டிகளில் 394 ரன்களையும் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த நிலையில், தான் இத்தனை ஆண்டுகாலம் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இருந்ததற்கு மூன்று பேர்தான் காரணம் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக், ‘என்னுடைய ஆரம்பகால கிரிக்கெட்டில் எனது கால் நகர்வுகள் குறித்து பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் யாரும் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரை கொடுக்கவில்லை. அப்போது என்னுடைய பேட்டிங் குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தது மட்டுமின்றி என் கிரிக்கெட் வாழ்க்கையையும் வெற்றிகரமாக மாற மூன்று பேர் காரணமாக இருந்தனர்.
அதில், மன்சூர் அலிகான் பட்டோடி, சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இவர்கள் மூவரும்தான் எனக்கு கால் நகர்வு குறித்து அறிவுரை வழங்கி, எங்கு நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தெளிவை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த சில அறிவுரைகள்தான் நான் பேட்டிங் செய்யும்போது மிகவும் பயன்பட்டது. அதனால் எனது ஆட்டமும் முன்னேற்றம் அடைந்தது’ என சேவாக் நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னதாக, 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அவருடைய நிறைய ஷாட்டுகளை காப்பியடித்து விளையாடி உள்ளதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
