"தோட்டாவ எங்க நெஞ்சுல வாங்வோம்"!.. தோனி குறித்து கேள்வி... உணர்ச்சிவசப்பட்ட கே.எல்.ராகுல்!.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனிக்காக உயிரையும் விடத் தயார் என்பதை போல கே.எல்.ராகுல் கூறியிருப்பது ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்று வரை இவரை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். தோனியின் கேப்டன்சி மீது ரசிகர்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் அவர் பெற்றுக்கொடுத்த ஐசிசி கோப்பைகள் தான்.
2007ல் ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தவர். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். கேப்டன்சியை தாண்டி தோனியின் நல்ல உள்ளம் தான் அவருக்கு அதிக ரசிகர் பட்டாளம் உருவாவதற்கு காரணம் என்றே கூறலாம்.
இந்நிலையில், தன் மனதில் தோனி எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து கே.எல்.ராகுல் விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருப்பார். இந்த தலைமுறைக்கு அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். ரசிகர்கள் மனதை தனது செயல்பாட்டால் வென்றுள்ளார். தோனிக்கு கீழ் நாங்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
அவரின் கேப்டன்சியில் பல்வேறு கோப்பைகளையும், சாதனைகளையும் படைத்துள்ளோம். ஆனால் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றியே சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான். தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக்கொள்வோம். யோசிக்கக்கூட மாட்டோம்.
தோனியிடம் இருந்து நான் ஒரு முக்கியமான பழக்கத்தை கற்றுக்கொண்டேன். அது என்னவெனில், எத்தகைய ஏற்றத்தாழ்வான சூழ்நிலைகளிலும், நிதானமாக எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டேன்" என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலர் மனம் நெகிழ்ந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
