பந்தை யாருக்கு வீசுற..? கடுப்புல DK கொடுத்த ரியாக்ஷன்.. விழுந்து சிரிச்ச விராட் கோலி.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் ரியாக்ஷனை பார்த்து கோலி சிரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வருடத்துக்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இதற்காக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகின்றன. அதே வேளையில், இந்த உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மற்றொருபக்கம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே நேற்று முன்தினம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய சூர்யகுமார், 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ஆஸி வீரர்கள் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி அடுத்தடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியின்போது, டீப் ஃபைன் லெக்கில் நின்றுகொண்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், தன்னிடம் அடிக்கப்பட்ட பந்தை எடுத்து வீசுகிறார். அப்போது, விக்கெட் கீப்பராக நின்றிருந்த தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க காத்திருந்தார். ஆனால், அர்ஷ்தீப் வீசிய throw வேறுபுறம் நின்றிருந்த வீரரிடம் சென்றது. இதனை பார்த்து கோவப்பட்ட தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பை பார்த்தபடியே நின்றிருந்தார். இந்த மொத்த சம்பவத்தையும் சிரித்துக்கொண்டே விராட் கோலி பார்க்கிறார். அதன்பிறகு சிரித்தபடி அங்கிருந்து நடந்து செல்கிறார் கோலி. இதனிடையே இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
