"அவரு இங்கிலாந்து பிரதமர் இல்ல".. THROWBACK படத்தை பகிர்ந்து பங்கமாக கலாய்த்த அசாருதீன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன் போட்ட ட்வீட் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக். இந்நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், இணையவாசிகள் புது ட்ரெண்டையும் கிளப்பியிருக்கிறார்கள். அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ராவிற்கும், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமையை குறிப்பிட்டு மீம்களை இறக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், ரிஷி சுனக் மற்றும் நெஹ்ரா இடையே உள்ள உருவ ஒற்றுமையை சுட்டும் விதமாக நெட்டிசன்கள் மீம்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சிறுவயதில் நெஹ்ராவிடம் பரிசு வாங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீன். மேலும் அந்த பதிவில்,"இந்த படத்தில் உள்ள நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் தான். அவர் இங்கிலாந்தின் பிரதமர் அல்ல. அப்படி வாட்சப்பில் இந்த புகைப்படம் பரப்பப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
The actual stars in the pic are @imVkohli with @ashishnehra1
Not UK’s new prime minister as being circulated on #WhatsApp pic.twitter.com/F00QKZhTg9
— Mohammed Azharuddin (@azharflicks) October 25, 2022
இந்தப் பதிவு வைரலாக பரவிய நிலையில், சிலர் உண்மையாகவே இருவருக்கும் இடையே (நெஹ்ரா - கோலி) உருவ ஒற்றுமை இருப்பதாகவும், விளையாடும் விதமாக சிலர் இப்படி செய்துவருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Also Read | சாலையில் கொட்டிய பண மழை.. தப்பிக்க முடியாதுன்னு திருடர்கள் செஞ்ச காரியம்.. உலக வைரல் வீடியோ..