'KRK' டிரைலர் ரிலீஸ் ஆன நாளில்.. ராஜஸ்தான் அணி அடித்த ரன்.. நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்.. "இது சரியான COINCIDENCE'அ இருக்கே.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தி உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில், மெதுவாக ரன் சேர்த்த பட்லர் - படிக்கல் ஜோடி, போக போக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்க விட்டது.
7 மேட்ச்'ல 3 Century
கடந்த போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக சதமடித்திருந்த ஜோஸ் பட்லர், டெல்லி அணிக்கு எதிராகவும் சதமடித்து தன்னுடைய ஃபார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் 116 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாக, நடப்பு ஐபிஎல் சீசனில், 7 போட்டிகள் ஆடி, 491 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மொத்தம் 3 சதங்களும் அடங்கும்.
முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்
படிக்கல் 54 ரன்களும், கடைசியில் சில ஓவர்களில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 46 ரன்களும் எடுத்திருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. தற்போதைய சீசனில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவாகியுள்ளது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், அந்த அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ராஜஸ்தான் அணி 15 ரன்களில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அடித்த ரன்னுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கும் செம காம்பினேஷன் உள்ளதை விக்னேஷ் சிவனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
செம 'Coincidence' ஆச்சே இது..
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பது போல அமைந்துள்ள நிலையில், 'Two Two Two' என ஆரம்பிக்கும் பாடல் ஒன்றும் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதே போல, இப்படத்தின் டிரைலரையும் இன்று படக்குழு வெளியிட்டிருந்தது.
அத்தகைய சூழ்நிலையில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை எடுத்துள்ளது. அனைத்துமே இரண்டாக உள்ளதை குறிப்பிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸின் ட்வீட்டை பகிர்ந்த விக்னேஷ் சிவன், இந்த ரன்னிற்கு வேண்டி, நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
