'மீம்ஸ்' மூலம் பதிலடி கொடுத்த 'அஸ்வின்'.. "இப்போ என்ன சொன்னாலும் வம்பு தான் போல.." மீண்டும் தோண்டிய 'மஞ்ச்ரேக்கர்'.. "இதுக்கு ஒரு 'எண்டு' இல்லையா??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் உலகைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) பற்றி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar) கூறியிருந்த கருத்து தான், அதிகம் விவாதங்களைக் கிளப்பியிருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் அஸ்வின், இதுவரை 400 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரை பல முன்னாள் வீரர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அனைத்து காலத்திற்குமான சிறந்த வீரராக அஸ்வினை என்னால் பார்க்க முடியாது என்றும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில், இதுவரை ஒருமுறை கூட அவர் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், பிராட்மேன், சோபர்ஸ், சச்சின், கோலி, கவாஸ்கர் உள்ளிட்டோரை தான், அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களாக தன்னால் கருத முடியும் என்றும், அஸ்வின் அந்த வரிசையில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஒருவரை, மஞ்ச்ரேக்கர் இப்படி குறிப்பிட்டிருந்தது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
பலர் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், தன்னைப் பற்றி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் செய்திருந்த ட்வீட்டை கவனித்த அஸ்வின், தன் மீதான விமர்சனத்திற்கு, அந்நியன் படத்தில் வரும் வசனம் ஒன்றுடன் உள்ள 'மீம்' ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், 'அப்படி சொல்லாத டா சாரி, மனசெல்லாம் வலிக்கிறது' என நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.
😂😂😂🤩🤩 https://t.co/PFJavMfdIE pic.twitter.com/RbWnO9wYti
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) June 7, 2021
இது, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகியிருந்தது. இந்நிலையில், அஸ்வினின் மீம்ஸை பார்த்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அதற்கு மீண்டும் ஒரு பதிலை தெரிவித்துள்ளார். அதில், 'இந்த மாதிரி எளிமையாக, நேரடியாக, கிரிக்கெட் பற்றி கருத்துக்களைச் சொன்னால் கூட, அது இந்த காலத்தில் வம்பாக மாறுகின்றது. இதனைக் காணும் போது, எனது இதயம் வலிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.
Also Chaari, my heart aches to see simple, straightforward, cricketing assessments kick up a fuss these days😂😂😂 https://t.co/7r7SNqpQq3
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) June 8, 2021
அஸ்வினின் கருத்திற்கு மஞ்ச்ரேக்கரின் பதில் ட்வீட்டும், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
