'கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் கொடுக்கணும்'... முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 08, 2021 07:26 PM

கொரோனா இரண்டாவது அலை காரணமாகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

CM Stalin writes letter to 12 state CM for Extension to repay debts

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரி பன்னிரண்டு மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்துமாறு இந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொண்டுள்ளதையும் இந்த கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் முதல்வர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெவ்வேறு தன்மைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில முதல்வர்கள் ஒன்றிணைவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Stalin writes letter to 12 state CM for Extension to repay debts

ஐந்து கோடி ரூபாய் வரை கடன் நிலுவை வைத்துள்ள சிறு கடனாளர்களுக்கு ஆறு மாதம்  அவகாசம் தர வேண்டும் என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக கேரளா, ஓடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  கடிதம் எழுதி உள்ளார்

Tags : #MKSTALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CM Stalin writes letter to 12 state CM for Extension to repay debts | Tamil Nadu News.