ஊரே 'தலையில' தூக்கி வச்சு கொண்டாடுறாங்க...! 'ஏன்'னு எனக்கு புரியவே இல்ல...!- 'இந்திய' வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன 'கருத்தால்' பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல யூடியுப் சேனலுக்கு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சஞ்சய் மஞ்சரேக்கர், அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என மக்கள் அஸ்வினை பற்றி பேசத் தொடங்கும் போது, எனக்கு அதனை ஏற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்திய வீரர்கள் இங்கு திணறலை சந்திக்கின்றனர். ஆச்சரியம் தரும் வகையில் மேற்கண்ட இந்த 4 நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. அது தான் அஸ்வினிடம் உள்ள ஒரு அடிப்படை பிரச்னை. அஸ்வின் உள்ளூர் பிட்ச்களில் மிக நன்றாக விளையாடுவார்.
அவருக்கு சாதகமான மைதானகளில் விளையாடும் போது அவர் சிறந்த வீரர் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர் முழுதும் விக்கெட் வீழ்த்துவதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிகராக ரவீந்திர ஜடேஜா முன்னேறியிருக்கிறார். எனவே பிற வீரர்களை கடந்த ஒரு வீரராக என்னால் அஸ்வினை நிச்சயமாக பார்க்க முடியாது.
அதே நேரத்தில் அக்ஸர் பட்டேல் அஸ்வினை விட இந்த பிட்ச்களில் கூடுதல் விக்கெட்களை எடுத்திருக்கிறார். எனவே தான் அஸ்வினை என்னால் எப்போதும் எல்லா நேரத்திலும் சிறந்த வீரராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.