உலகத்துலயே எந்த குற்றவாளியும் இவ்ளோ ஈஸியா போலீஸ்'ல சிக்கி இருக்க மாட்டான்".. 7 வருசமா சிக்காத வாலிபர்.. "கடைசியில் மாட்டியது எப்படி??"
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 7 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி, போலீசாரிடம் மிகவும் வினோதமாக வந்து சிக்கியுள்ள சம்பவம், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டின் Mpumalanga என்னும் மாகாணத்தை சேர்ந்தவர் Thomas Ngcobo. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, சுமார் 1,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) மதிப்புள்ள ஹார்டுவேர் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, அவர் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்த இடத்தில், தான் சேர்க்க வேண்டிய பொருட்களை தகுந்த வாடிக்கையாளர்களிடம் சேர்க்காமல் தவறான முகவரியிலும் சேர்த்ததாக கூறப்படுகிறது.
இது போக, ஒரு சில பொருட்களை டெலிவரி செய்யாமல், தனது உரிமையாளரையும் தாமஸ் ஏமாற்றி வந்துள்ளார். அப்படி இருக்கையில், நிறுவனத்தின் Invoice விவரத்தை பார்த்த போது தாமஸ் செய்து வந்த மோசடி வேலை அவரது உரிமையாளருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், தாமஸ் மீது உடனடியாக Mpumalanga காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இப்படி ஹார்டுவேர் பொருட்களை எடுத்துக் கொண்டு தலைமறைவான தாமஸ், கடந்த 7 ஆண்டுகளாக போலீசார் பிடியில் சிக்காமல் இருந்து வந்துள்ளார். Most Wanted Criminal ஆக வலம் வந்த தாமஸ், இத்தனை ஆண்டுகள் கழித்து சிக்கியுள்ளது மட்டுமில்லாமல், எப்படி அவர் சிக்கினார் என்பது தான் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வேடிக்கையான குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
தாமஸ் சிக்கியது தொடர்பான தகவலின் படி, போலீஸ் ஆள் சேர்ப்பிற்காக அவர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனால், தனது விண்ணப்பம் மற்றும் வேலை கிடைப்பது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக நேரடியாக காவல் நிலையத்திற்கே தாமஸ் வந்துள்ளார். இத்தனை நாட்கள் தேடி வந்த நபர், எந்த பொறியையும் விரிக்காமல் நேராக வலைக்குள் வந்து சிக்கிக் கொண்டது கடும் வேடிக்கையை போலீசார் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்காவின் "Dumbest Criminal" என்ற பெயரும் தாமஸுக்கு கிடைத்துள்ளது. தற்போது அவரை கைது செய்துள்ள போலீஸ், வேறு மோசடி அல்லது திருட்டில் சம்மந்தம் உள்ளது தொடர்பாக அவரை விசாரித்து வருகின்றனர்.
Also Read | நிறைவேறிய நரிக்குறவர் மக்களின் பலவருட கனவு - முதல்வருடன் தேநீர் சந்திப்பில் நன்றி கூறி நெகிழ்ச்சி.!