"இது என்னடா ஆஸ்திரேலிய கேப்டனுக்கு வந்த 'சோதனை'.." 'இந்திய' அணியை விமர்சித்த 'டிம் பெயின்'.. கிழித்து தொங்க விட்ட 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி, வரலாறு படைத்திருந்தது.

அதிலும் குறிப்பாக, பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தோல்வியே சந்திக்காமல் இருந்த ஆஸ்திரேலியாவை, இந்திய அணி வீழ்த்தி, சாதனை படைத்திருந்தது.
இந்த தோல்வி குறித்து, தற்போது விளக்கமளித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் (Tim Paine), ஒன்றுமே இல்லாத விஷயத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்துவதிலும், அதன் மூலம் கவனத்தை சிதறடிப்பதிலும், இந்திய அணியினர் கில்லாடிகள் என்றும், இதன் காரணமாக தான், அந்த தொடரில் எங்களது கவனத்தை நாங்கள் அதிகம் இழந்து, தொடரில் தோல்வி அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா கேப்டனின் இந்த கருத்து, இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாது, பல கிரிக்கெட் பிரபலங்களையும் எரிச்சலடையச் செய்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பராக சபா கரீம் (Saba Karim), 'டிம் பெயின் கூறியது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமான கருத்தும் தான். தங்களது தவறுகளை மறைப்பதற்கான டிம் பெயினின் முயற்சி தான் இது. சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு, சொந்த நாட்டின் அணிகள் தான் இது போன்ற கவனச் சிதறல்களை ஏற்படுத்தும்.
இந்திய அணியும் இதனை பலமுறை எதிர்கொண்டுள்ளது. ஆனால், டிம் பெயின் அப்படியே மாற்றிக் கூறுகிறார். ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரே, இந்திய அணி அற்புதமாக ஆடியதாக குறிப்பிட்டிருந்தார். அவர் தோல்வி குறித்து எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, அதிலிருந்து மீண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தான் அவர்கள், தங்களது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், டிம் பெயின் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நான் நினைக்கிறேன். அவர் நீண்ட நாட்கள் கேப்டனாக நீடிக்க மாட்டார் என்பதும் என கருத்து. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில், டிம் பெயினை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும்' என சபா கரீம், பெயினுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
