‘அவர்கிட்ட கேட்க எனக்கு பயம்’.. ‘நைட் சாப்பிடும்போதுதான் ஒருத்தர் சொன்னாரு’.. தோனி ஓய்வை அறித்தபோது நடந்த விஷயங்களை பகிர்ந்த ருதுராஜ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபோது, சிஎஸ்கே அணியில் நடந்த நிகழ்வு குறித்து ருத்ராஜ் கெயிக்வாட் பகிர்ந்துள்ளார்.
![Ruturaj recalls at CSK camp when Dhoni announced retirement Ruturaj recalls at CSK camp when Dhoni announced retirement](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ruturaj-recalls-at-csk-camp-when-dhoni-announced-retirement.jpg)
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். தோனியின் இந்த திடீர் அறிவுப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தோனி ஓய்வை அறிவிக்கும் போது ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிந்தார். அந்த சமயம் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் தோனியின் ஓய்வின்போது சிஎஸ்கேவில் நடந்த சம்பவங்கள் குறித்து தற்போது ருதுராஜ் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ருதுராஜ், ‘தோனி ஓய்வை அறிவித்த ஆகஸ்ட் 15-ம் தேதி நாங்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு அப்போது தோனியின் ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரியாது. அவரிடம் கேட்கவும் எனக்கு தைரியம் இல்லை. ஏனென்றால், நான் அப்போது அறிமுக வீரர்தான்.
மாலை 6:30 மணிக்கு பயிற்சியை முடித்துவிட்டு சாப்பிட சென்றோம். அப்போதுதான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதாக ஒருவர் கூறினார். அவர் உடனிருந்த யாருக்குமே இதுப்பற்றி தெரியாது. யாருமே பேசவில்லை, அனைவரும் அமைதியாகவே இருந்தனர். அவர் இனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதை உணர எனக்கு 2 நாட்கள் ஆனது’ என ருதுராக் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)