அந்த உலகக்கோப்பையில் தோத்ததும் எனக்கும், என் மனைவிக்கும் ‘கொலை மிரட்டல்’ வந்தது.. பரபரப்பை கிளப்பிய ‘சிஎஸ்கே’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததும், பல கொலை மிரட்டல்கள் வந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசீ தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி கால்இறுதி சுற்றில் நியூஸிலாந்து அணியின் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் அப்போது தென் ஆப்பிரிக்க அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அந்த சமயம் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசீ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ESPNcricinfo சேனலுக்கு அளித்த பேட்டியில் டு பிளெசீ இதுதொடர்பாக பகிர்ந்துள்ளார். அதில், ‘அந்த போட்டிக்கு பின் எனக்கும், என் மனைவி இமாரி விஸ்ஸருக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. அது ஒரு மோசமான நிகழ்வு’ என டூ பிளெசீ கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக டு பிளெசீ விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தில் டு பிளெசீ உள்ளார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் டு பிளெசீ (320 ரன்கள்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
