VIDEO: அடேங்கப்பா..! தோனிக்கு முன்னாடியே இவர் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடிச்சிருக்காரே.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ.. யார் அந்த வீரர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு தோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி (Dhoni), கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் மினி உலகக்கோப்பை என கருதப்படும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த மூன்று கிரிக்கெட் தொடரிலும் கோப்பையை கைப்பற்றியே ஒரே கேப்டன் என்ற வரலாற்றை தோனி படைத்துள்ளார்.
இக்கட்டான பல தருணங்களில் பொறுமையாக போட்டியை கையாண்டு அணியை தோனி வெற்றி பெற வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை ‘கூல் கேப்டன்’ என அழைத்து வருகின்றனர். அதேபோல் தோனி விளையாடும் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் (Mohammad Azharuddin), தோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இப்படி அடித்துள்ளார். அப்போட்டியில் முகமது அசாருதீன், 77 பந்துகளில் 109 ரன்கள் (18 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Classic Azhar pic.twitter.com/DeRJjfQlzl
— Stone Cold (@StoneCo06301258) May 15, 2021

மற்ற செய்திகள்
